மட்டக்களப்பில் யுவதியின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு!!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவலடங்கும் தாழங்குடா பிரதேச கிராமமொன்றிலுள்ள தகரக் கொட்டிலில் இருந்து யுவதி ஒருவரிஜன் சடலத்தைத் தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாழங்குடா, வேடர்குடியிருப்பு, கடற்கரை வீதியை அண்டி வாழும் சகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரின் சடலமே திங்கட்கிழமை 14.05.2018 மீட்கப்பட்டது.

இவர் கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த யுவதியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றி;ல் தொழில் புரிவதாகவும் குடும்பம் சுமுகமாக வாழ்க்கை நடாத்துவதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக திங்கட்கிழமை காலை 8:30 மணி வரையில் தனது நண்பர்களுக்கு தனது கைப்பேசியில் இருந்து குறுந் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சடலம் உடற்கூறாய்வுக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]