யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிப்படைந்தவர்களுக்கான நடமாடும் சேவை

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிப்படைந்தவர்களுக்கான நடமாடும் சேவை

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இழப்புக்களை சந்தித்தவர்களுக்கான நடமாடும் சேவை ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது

யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் கே.என்.டக்ளஸ்தேவாநந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்

வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் இழப்பீடுகளை சந்தித்தவர்களுக்கான நஷ்டஈடுகளை வழங்கும் முகமாக அவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இந்த நடமாடும் சேவையியூடாக இன்று மேற்கொள்ளப்பட்டது

யாழ் மாவட்டத்திலுள்ள பதினைந்து பிரதேச செயலக பிரிவுகளிற்குட்பட்ட சுமார் அறுநூற்றிற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் இன்றையதினம் தம்மை பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கான இழப்பீட்டுத்தொகையினை விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றினூடாக ஒரு மாதத்திற்குள் பெற்றுக்கொடுக்க தாம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்

மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]