யுத்தத்தை வெற்றிக்கொண்ட போதிலும் தீவிரவாதம் தோற்கடிக்கப்படவில்லை

நாம் யுத்தத்தை வெற்றிக்கொண்ட போதிலும் புதிய வடிவில் தோற்றம் பெற்றுள்ள தீவிரவாதத்தை தோற்கடிக்கடிக் முடியாது போனமையை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பயங்கரவாதத்தையும், கூட்டான குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்றும் பிரதமர் கூறினார்.

கொழும்பு கோல்பீஸ் ஹோட்டலில் இன்று ஆரம்பமான சார்க் அமைப்பின் 8 நாடுகளின் உட்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

பாகிஸ்தான், இந்தியா உட்பட பிராந்தியத்தின் சில இடங்களில ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி சைபர் தாக்குதல் இணையத்தாக்குதல் போன்றவற்றின் ஊடாகவும் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக இங்கு பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தின் கட்டப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டத்தின் மூலம் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காத வகையில் ஜனநாயகத்தையும், சமாதானத்தையும் ஸ்தாபிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றும் பிரதமர்தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]