யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும்

யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டுமென நோர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்பஜோர்ன் காஸ்ட்டாஸ்டெர் ( Thorbjørn Gaustadsæther ) தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களது வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேறுவதற்கு உதவிகளை தொடர்ந்தும் வழங்க நோர்வே அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]