யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல்களை புனரமைக்க நிதியளிப்பு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் நிதியளிப்புச் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின், புனர்வாழ்வு அதிகாரசபையினூடாக காத்தான்குடி குலபாஉர் ராஷிதீன் பள்ளிவாயல் மற்றும் ஹிழுறிய்யா பள்ளிவாயல்களுக்கு முதற் கட்டமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை 25.06.2018 இடம்பெற்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட

காத்தான்குடி நகர சபை தலைவரும் ஹிழுறிய்யா வட்டார மக்கள் பிரதிநிதியுமான எஸ்.எச்.எம். அஸ்பர் இக்காசோலைகளை அந்தந்தப் பள்ளிவாயல்களின் நிர்வாகிகளிடம் கையளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]