யுடியூபில் வைரலாகும் ரஜினியின் 2.0 பாடல் மேக்கிங் வீடியோ உள்ளே

ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’-இன் பாடலை உருவாக்கும் காட்சிகள் யுடியூபில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் ‘எந்திரன் 2.0’ திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. 3டி தொழில் நுட்பத்தில் உருவாகி வரும் இதனை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

ஹாலிவுட்டுக்கு இணையாக எடுக்கப்படும் இத்திரைப்படத்தில், அதிகளவு கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் பல்வேறு ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றி வருகின்றார்கள்.

திட்டமிடப்பட்ட பட்ஜெட்டை தாண்டி அதிக அளவு செலவில் உருவாகும், இத்திரைப்படத்தின் மீது, ரஜினி ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், தற்போது இந்தப் படத்தின் ‘இந்திர லோகத்து சுந்தரியே’ என்ற பாடல் உருவாக்கும் காட்சிகள் யுடியூபில் பதிவேற்றப்பட்டுள்ளது. அது ரஜினி மற்றும் எமிஜாக்சன் ரசிகர்கள் இடையே பேரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]