யாழ். விபத்தில் இருவர் பலி

யாழ்

யாழ்ப்பாணம் நீர்வேலியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி மற்றும் ஹயஸ் ரக வான் என்பன நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த சிறுமியுமே ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்வேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]