யாழ் வாள்வெட்டு சம்பவங்களோடு தொடர்புடைய முக்கிய நபர் கைது

யாழ் வாள்வெட்டு சம்பவங்களோடு தொடர்புடைய முக்கிய நபர் கைது

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களோடு தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைமறைவாகி இருந்த அவர் நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் குறித்த நபர் சட்டவிரோத ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டதுடன், அண்மைக்காலமாக அதில் இருந்து விலகி, தனிப்பட்ட பல வன்முறைகளில் ஈடுபட்டுவந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]