யாழ் மாவட்ட ரீதியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்

யாழ்ப்பாணம்: வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கலைப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சிங்கராசா நிலக்சன் முதலிடம் பெற்றுள்ளதுடன், வர்த்தக பிரிவில் யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மாணவி ஜே.சாம்பவி முதலிடம் பெற்றுள்ளார்.

அதேபோன்று, உயிர் முறைமை தொழில்நுட்பவியல் பாடத்தில் ஸ்கந்தவரோதய கல்லூரியைச் சேர்ந்த மாணவி ரவிச்சந்திரன் கலெக்சியா முதலிடம் பெற்றுள்ளதுடன், அதேபாடசாலை மாணவர் ம.கோபிசன் மூன்றாடமிடம் பெற்றுள்ளார்.

அத்துடன், யாழ்.வேம்படி உயர்தர பாடசாலை மாணவி அபிநாச அருள்மொழி உயிரியல் பாடத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன், பெளதீக விஞ்ஞான பாட பிரிவில் ஹாட்லி கல்லூரி மாணவன் சண்முகராசா சஞ்சித் ஆகியோர் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

இம்முறை யாழ்.மாவட்டத்தில் இருந்து எந்தவொரு மாணவர்களும் தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]