யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மறைவு

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி தனது 84ஆவது வயதில் நேற்றுகாலமானார்.

யாழ். மாவட்ட முன்னாள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து நீண்ட காலம் சேவையாற்றிய அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றில் குரல்கொடுத்து வந்த தமிழ் மக்கள் பிரதிநிதிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.

தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வந்த அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தான் இறக்கும் வரை ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டி வந்தவராவார். அன்னாரின் இழப்பு, தமிழ் மக்களை பொறுத்தளவில் பேரிழப்பாக அமைந்துள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள், நாளை மறுதினம் கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]