யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ராஜித சிறி தமிந்த பொறுப்பேற்றார்

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ராஜித சிறி தமிந்த இன்றைய தினம் பதவியேற்றுள்ளார்.

பதவியேற்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று மாலை இடம் பெற்றது.

சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்று மதத் தலைவர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் வைபவ ரீதியாக மாலை 3 ,50 மணி அளவில் பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இன்றைய பதவியேற்பு நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேகேஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]