யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன் இடம்பெற்ற வாகனவிபத்து

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு பொருட்கள் ஏற்றி வந்த ஹன்ரர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் இன்று மாலை (19) 4.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த ஹன்ரர் ரக வாகனம் மாவட்ட செயலகத்திற்கு தேவையான உபகரணங்களை ஏற்றி வந்து உபகரணங்களை இறக்கிவிட்டு புறப்பட தயராகிய வேளையிலேயே வேகக்கட்டுப்பாட்டினை இழந்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது வாகனங்களை நிறுத்தி வைக்கும் தரிப்பிடத்திற்குள் புகுந்ததினால் பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு

சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் வருகை தந்து பார்வையிட்டதுடன் விபத்து தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]