யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

யாழ் மாவட்ட அபிவிருத்தி

யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடலில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க துiறாசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்

குறிப்பாக காணிவிடுவிப்பு மீள்குடியேற்றம்,கல்வி, சுகாதாரம், விவசாயம்,மீன்பிடி, நீர்ப்பாசனம்,நீர்வழங்கல் மற்றும் வீதி அபிவிருத்தி ஆகிய துறைகளின் கீழ் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் மற்றும் இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது

மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து கலாசார அலுவலகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே,பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,ஈஸ்வரபாதம் சரவணபவன்,சிவஞானம் சிறிதரன் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோலட் வடமாகாணசபை தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் உள்ளு}ராட்சி சபைகளின் தவிசாளர்கள் திணைக்களங்களின் செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் துiறாசர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

யாழ் மாவட்ட அபிவிருத்தி யாழ் மாவட்ட அபிவிருத்தி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]