யாழ் மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச ரீதியில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களிலும் விதாதா வள நிலையங்கள் அமைத்து, இந்த நிலையங்களினுடாக இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச ரீதியில் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முகமாக இன்று (04) வருகை தந்த விஞ்ஞான தொழில்நுட்ட மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சரத் அமுனுகம யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உட்பட பிரதேச செயலாளர்கள், மற்றும்யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். யாழ்.மாவட்டத்தில் பல செயற்திட்டங்களை முன்னெடுக்கும் நோகத்துடன் இங்கு வருகை தந்துள்ளேன். யாழ்.மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான தொழில் கற்கைகளை ஆரம்பிக்கும் நோக்கத்தில், இங்குள்ள விதாதா வள நிலையங்களில் 8 மாணவர்களுக்கான வேலை வாய்ப்புப் பெறக்டிய கற்கை நெறிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

அந்த பயிற்சி நிலையங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், மேலும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பினைப் பெற விதாதா வள நிலையங்களில் தொழில்பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். விதாதா வள நிலையத்தில் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு ஆங்கில மொழியினை கட்டாயமாக படிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

வறிய மாணவர்களுக்கு ஆங்கில மொழியையும் தொழில்நுட்ப பாடத்தினையும் படிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. ஆனால், வசதி படைத்த மாணவர்களுக்கு ஆங்கிலமொழி மற்றும் தொழில்நுட்ப பாடங்களை படிப்பதற்கான வசதிகள் கிடைக்கின்றன.

இவ்வாறான கற்கைகளைப் படிப்பவர்கள், தொழில்வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும். தாதிய பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்பம், ஆங்கில கற்கைகள் உள்ளிட்ட பல பாடநெறிகளை ஒரே விதாதா வள நிலையங்களில் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எல்லா பிரதேச செயலகங்களிலும் உள்ள விதாதா வள நிலையங்களில் ஒரே மாதிரியான வசதிகளை எதிர்பார்க்க முடியாது. சில விதாதா வள நிலையங்களில் ஆசிரியர் பற்றாக்குளைகள் நிலவும். அதற்கு ஏற்றவாறு ஒரு விதாதா வள நிலையத்தில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம்.
விதாதா வள நிலையங்களில் கற்கும் மாணவர்களுக்கு சர்வதேசத்திற்கு ஒப்பான சான்றிதழ்களை வழங்க முடியுமென்பதுடன், அந்த சான்றிதழ்களைப் பயன்படுத்தி உள் நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, யாழ்.மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கே எமது வாய்ப்பினை வழங்குவதே எமது நோக்கம் என்றார்..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]