யாழ். மாநகர மேயர் வேட்பாளர் ஆனொல்ட் உண்மைக்குப் புறம்பான செய்தி – தமிழரசு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்

யாழ். மாநகர மேயர் வேட்பாளர் ஆனொல்ட் உண்மைக்குப் புறம்பான செய்தி என்கிறது தமிழரசு

யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இமானுவேல் ஆனொல்ட் களமிறங்குவார் என வெளியாகிய பத்திரிகைச் செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே எட்டப்பட்ட தீரமானத்தின் அடிப்படையில் வடக்கு – கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையிலேயே முதல்வர், துணை முதல்வர் தெரிவு செய்யப்படுவர்.

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக இ.ஆனொல்ட் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலேயோ வேட்பாளர்கள் சார்பிலேயோ செய்திகளை வெளியிட்டு தேவையற்ற சரச்சைகளுக்கு இடமளிக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொளகின்றேன் – என்றுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதன்போது யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளராக இ.ஆனொல்ட் களமிறங்குகிறார் எனத் தெரிவித்திருந்தார்.