யாழ். மாநகர சபை வேட்பாளர் தயாளன் மீது தாக்குதல் – பொலிஸில் முறைப்பாடு

தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாநகர சபை வேட்பாளராகப் போட்டியிட்ட தயாளன் மீது அகில இலங்கை தமிழக் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நேற்று இரவு தாக்குதல் மேற்கொண்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் போட்டியிட்டு தற்போது மாநக முதல்வரின் வட்டார இணைப்பாளராகப் பணியாற்றும் இ.தயாளன் சுண்டிக்குழிப் பகுதியில் இயங்கும் ஓர் ச.ச.நிலையத்திற்குத் தேவையான மண்னைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால் குறித்த விடயத்தில. அப் பிரதேச வட்டாரத்தினை பிரதிநிநித்துவப் படுத்தும் உறுப்பினர்தனக்கு தெரியப்படுத்தவில்லை என்பதாகவே பிரச்சணை அமைந்துள்ளது.

இதனால் குறித்த இடத்திற்கு தொலைபேசியில் அழைத்து மது போதையில் தலைக் கவசத்தினால் நேற்று இரவு 9 மணியளவில் தாக்கியதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதாக பதிவு செய்யக்பட்டுள்ளது.

இதேநேரம் தாக்குதலிற்கு இலக்காணவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]