யாழ் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ மாண‌வ‌ர்கள் பிணையில் விடுதலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் உட்பட 3 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைதான அவர்களுக்கு பிணை வழங்க சட்ட மா அதிபர் பரிந்துரைத்தமைக்கு அமைய, தலா 100,000 பெறுமதியான சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட 4 சட்ட ஏற்பாடுகளில் ஒன்றை மீளப்பெற்றுக்கொண்டு ஏனைய 3 குற்றச்சாட்டுக்களிலும் மாணவர்களுக்கு நீதிவான் நீதிமன்றின் ஊடாக பிணைவழங்கும் அறிவுறுத்தல் சட்ட மா அதிபரால்வழங்கப்பட்டது.

மாணவர்கள் இருவர் மீதும் பயங்கரவாதத்தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் உபவிதிகளின் கீழான ஏற்பாடு மற்றும் சர்வதேசகுடியியல் மற்றும் அரசியல்உரிமைகளுக்கான பட்டயம் ஆகிய நான்குஏற்பாடுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள்முன்வைக்கப்பட்டன.

இதில் மேன்முறையீட்டு நீதிமன்றால் மட்டும்பிணை வழங்க கூடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான குற்றச்சாட்டைமீளப்பெறுமாறு கோப்பாய் பொலிஸாருக்குசட்ட மா அதிபரால் அறிவுறுத்தல்வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ்மாணவர்கள் இருவருக்கும் எதிராகமேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்வகையில் தற்போது பிணை வழங்குவதற்குசட்ட மா அதிபரால் பொலிஸாருக்குஅறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் இன்று வியாழக்கிழமை மாணவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதுடன் கோப்பாய் பொலிஸார் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தமது அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்தனர்.

இதனை ஆராய்ந்த நீதவான் ஆஜர்ப்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்தார்.வழக்கினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]