யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு திறந்த இதய அறுவைச் சிசிச்சைகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு திறந்த இதய அறுவைச் சிசிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலை அறிவித்துள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ்.ராஜசேகரன் என்பவருக்கு யாழ். போதனா வைத்தியாசலையில் கடந்த 20ஆம் திகதி முதலாவது திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று முன்தினம் விசுவமடுவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திறந்த இதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதய சிகிச்சை நிபுணர்களான முகுந்தன், மற்றும் பிரேம்கிருஸ்ணா ஆகியோர் இந்த திறந்த இதய அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.