யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டை கண்டிக்கும் வடக்கு முதல்வர்!!

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதின கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்ளாமை வருதமளிப்பதாகவும், பல்கலைக்கழக மாணவர்கள் எமக்கெதிரானவர்கள் அல்ல. ஆனால், ஏதோ தவறான பல கருத்துக்களை மாணவர்களை ஆட்கொண்டுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஏற்பாட்டு ஆரம்ப கலந்துரையாடல் இன்று (09) வடமாகாண முதலமைச்சர் தலைமையில், முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொது அமைப்புக்களுடன் சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதினத்தினை நினைவுகூறுவதற்கான எண்ணம் மாணவர்கள் மத்தியில் இருந்திருந்தால், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் எம்முடன் கலந்தாலேசித்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல், நாங்கள் நினைவுதினத்தினை செய்யப்போகின்றோம் எங்களுடன் நீங்கள் கலந்கொள்ளுங்கள் என்று கேட்பது வருத்தப்பட வேண்டிய ஒரு செயல். ஒவ்வொருவரும் நாங்கள் செய்கின்றோம் எங்களுடன் கலந்கொள்ளுங்கள் என்று கேட்டால் அவ்வாறு நாங்கள் செய்ய முடியாது. உத்தியோக பூர்வமாக தான் நாங்கள் ஒன்றினைச் செய்ய முடியும்.

கடந்த 3 வருடங்களாக செய்து வருகின்றோம். அதன் காணி எமது அமைச்சின் கீழ் வருகின்றது. வடமாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதனால், மக்களின் பிரதிநிதித்துவத்தினைக் கொடுக்க வேண்டிய உரித்து எமக்கு உள்ளது.

உத்தியோகபூர்வமாக எமது கடமைகளைச் செய்து வருகின்றோம். இதில் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் எம்முடன் முற்கூட்டியே கலந்தாலோசித்து செயற்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், எமது கலந்துரையாடலிலும் கலந்துகொள்ளாமல் இருந்தது மனவருத்தத்தினைத் தருகின்றது.

தனியாக செய்யாமல் அனைவரும் இணைந்து செய்வது உசிதம் என கருதுவதால், எமது யாழ்;.பல்கலைக்கழக மாணவர்கள் எமக்கு எதிரானவர்களும் அல்ல. நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்களும் அல்ல. எம்முடன் இணைந்து நினைவுதின நிகழ்வில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவற்றினை நடைமுறைப்படுத்த உதவி புரிய வேண்டும். எம்முடன் இணைந்து நினைவுகூறல் நிகழ்வினை முன்னெடுக்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்த வருடம் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுஆண்டின் 10வது வருடம். அத்துடன், முதலாவது வடமாகாண சபையும் இந்த வருடத்துடன் நிறைவடைகின்றது. இப்போது இருந்தே பரவலாக ஒரு குழுவினை நியமித்தால், பலவிதமான நடவடிக்கைகளையும், அடுத்த வருட ; மே 18 ஆம் திகதிக்கு முன்னர் எடுக்க முடியும். நினைவுத் தூபி அமைக்க வேண்டுமாயின் அமைக்கவும் முடியும். அத்துடன், 10வது வருட நினைவு நிகழ்வினை இன்னும் சிறப்பாகவும், உணர்வு பூர்வமாகவும் செய்ய வேண்டுமென்றும், இந்த வருட நினைவேந்தல் நிகழ்வுகளை சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.