யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக வகுப்புப்புறக்கணிப்பு

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக வகுப்புப்புறக்கணிப்பு.

உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் விசேட கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டனர்.

குறித்த அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் சகல அரசியல் கைதிகள் விடயத்திலும் அரசியல் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு, அனைவரையும் விடுவிக்க வலியுறுத்தியும் யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பீடங்களும் வகுப்புப்புறக்கணிப்பை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் இப்போராட்டத்தை மக்களிடம் தெளிவுபடுத்தி வலுச்சேர்க்கும் விதமாக விசேட கவனயீர்ப்பொன்றை மாணவர்கள் மேற்கொண்டனர்.

குறித்த விடயத்தில் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும்பொருட்டு இன்று சகல மாணவர்களும் இணைந்து கையெழுத்திடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அத்துடன் இப்போராட்டம் தொடர்பில் பொதுமக்களிடமும் கையெழுத்துப்பெறும் நடவடிக்கைகளை மாணவர்கள் மேற்கொண்டதுடன் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பீட மாணவர்களும் இந்த கையெழுப்போராட்டத்தில் பங்குபற்றி தமது ஆதரவுகளை வெளிப்படுத்தினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]