யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மாபெரும் கண்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மாபெரும் கண்காட்சி இன்று (04) சிறப்பாக ஆரம்பமாகியது.

வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்தார்.
வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து, உள்நாட்டு, வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் இவலூஷன் பிறைவட் லிமிடட்டின் பங்களிப்புடன் மாபெரும் மருத்துவக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

யாழ்.மருத்துவபீட வளாகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சியானது, நாளை(05) மற்றும் நாளைமறுதினம் (06) மற்றும் 07 ஆம் திகதி ஆகிய 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

இதன்போது, கண்காட்சியில் தமது ஆக்கங்கள் மற்றும் பாடல்கள், கண்காட்சியின் முகப்பு வடிவமைப்பு உள்ளிட்ட பல செயற்திட்டங்களை முன்னெடுத்த பாடசாலை மாணவர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

சான்றிதழ்களை, வடமாகாண சுகாதார அமைச்சர் ஞானசீலன் குணசீலன் மற்றும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன் சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன் உள்ளிட்டோர் வழங்கி வைத்தனர்.

மக்களின் வாழ்க்கைத்தரமும் சுகாதார நிலையையும் உயர்த்தப்படுத்தல். உணவுப்போசாக்கின் தரம் உயர்த்தப்படுத்தல். நோய்நிலைமைகளையும் அவற்றை தடுத்தல் சம்மந்தமான அறிவு மேம்படுத்தப்படல்.

தொற்றா நோய்களின் அதிகரிப்பு குறைக்கப்படுதல். பாடசாலை மாணவர்களின் உயிரியல் விஞ்ஞானம் தொடர்பான அறிவு மேம்படுத்தப்படல். சுகாதார துறை சார்ந்த அறிவூட்டல் மூலம் சுகாதார துறைக்கு பொருத்தமானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுதல் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியானது 5 வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பீட மாணவர்களினால் நடாத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.இதன்போது, விருந்தினர்கள், கண்காட்சிக் கூடத்தினையும் பார்வையிட்டனர்.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]