யாழ். பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர்களுக்கு விளக்கமறியல்

யாழ். பல்கலைக்கழக

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் வருட சிங்கள மாணவர்கள் நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நான்காம் வருட மாணவர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

குறித்த மாணவர்களுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]