யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்: மூவர் காயம்

யாழ். பல்கலைக்கழகத்தில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனையடுத்து, 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் என கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]