யாழ் பல்கலைகழக வளாகத்தில் 10 வருடங்களின் பின் மாவீரர் தினம்

யாழ் பல்கலைகழக வளாகத்தில் 10 வருடங்களின் பின் மாவீரர் தினம்

யாழ் பல்கலைகழக வளாகத்தில் நேற்று மாலை 6.05க்கு மாவீரர் தினத்தை முன்னிட்டு, விளக்கேற்றி நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

அனைத்து பீட பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இவை இடம்பெற்றது.

இதில், யாழ் பல்கலைகழக பேராசிரியார்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தேசிய மாவீரர் தினம் நேற்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது வீர மரணம் எய்திய மாவீரர்களுக்கு மூன்று நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து வாகரைப் பிரதேசத்தின் மாவீரர் தாய் ஒருவரினால் மாவீரர் ஈகைச் சுடரேற்றப்பட்டது. பின்னர், கலந்து கொண்ட அனைவராலும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாகரைப் பிரதேசத்தில் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் பத்து வருடங்களுக்கு பின்னர் இடம்பெறும் தேசிய மாவீரர் தினத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சா.வியாளேந்திரன், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சுரேஸ், ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆ.ஜெகன் உட்பட பல அரசியல் கட்சி ஆதரவாளர்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]