யாழ் . நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம்!

யாழ்ப்பாண பிரதான நீதவான் நீதிமன்றின் நீதிபதி இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை 5.10 மணியளவில் நல்லூர் வீதிக்கு அண்மையில் வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, நீதிபதியின் பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரும் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இது ஒரு திட்டமிடப்பட்ட துப்பாக்கி பிரயோகமாகும். மேலும் 3, 4முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை நான் அவதானித்தேன்.

குறித்த பொலிஸ் சார்ஜனை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு பொலிஸ் அதிகாரிகளுககு அறிவித்தேன்.

பாதுகாப்பு பலபடுத்துமாறும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கூறினேன்.

நான் தினமும் டெம்பள் பாதையில் செல்வது வழமை. இதை தினமும் அவதானித்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த துப்பாக்கி பிரயோகமானது ஒரு அனுபவம் நிறைந்த நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.

இந்த சம்பவம் நீதிதுறைக்கு பெரும் சவால் என்பதையும் நான் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், கடந்த காலங்களாக அண்மைய வழக்குகள் மிகவும் முக்கியமான வழக்குகளாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே, அந்த வழக்குகளுடன் தொடர்புடையவர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

பாதுகாப்பு அமைச்சு, நீதியமைச்சு தகுந்த இந்த சம்பவத்துக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்கின்றேன் என்றார்.

 

வித்யா கொலை வழக்குடன் தொடர்புடையவர்களே இதை செய்திருக்கலாம் எனவும் பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]