யாழ் நகரின் இடர்பாடுகளுக்கு உரிய தீர்வு – டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தா

யாழ் நகரின் இடர்பாடுகளுக்கு உரிய தீர்வுகாணும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

யாழ் மாநகரத்தை மேலும் அழகுபடுத்தி முன்னேற்றங்காணச்செய்யும் அதேவேளை பழக்கடை வியாபாரிகள் நலன்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் நகரப்பகுதி பழக்கடை வியாபாரிகளால் நடத்தப்பட்ட வருடாந்தப் பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.