யாழ். நோக்கி பயணித்த ரயிலில் தீ

யாழ் தீ விபத்து கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட ரயிலில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் யாழ். நோக்கி புறப்பட்ட அதிவேக சொகுசு ரயிலில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

இன்று நண்பகல் 12.30 மணியளவில் சாவகச்சேரி, மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ரயில் சென்று கொண்டிருந்த போது இயந்திர பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், பஸ்களில் ஏற்றி தமது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து யாழ்.ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]