யாழ். தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி

தபால் மூல வாக்களிப்பு

யாழ்ப்பாணம்; நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலிற்கு தபால் மூலம் வாக்களிக்க 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதென யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தபால் மூலம் வாக்களிக்க யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தவர்களில், 17 ஆயிரத்து 273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 22 ஆம் மற்றும் 25,26 ஆம் திகதிகளில் தமது வாக்குகளை அளிக்கமுடியும். 22 ஆம் திகதி தேர்தல் திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும், 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஏனைய அரச அலுவலகங்கள் கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், போக்குவரத்துச் சபை டிப்போக்கள், பாதுகாப்பு படை முகாம்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களில் தபால் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க முடியுமென்றும் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]