யாழ் செங்குந்தா சந்தை தொகுதியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

யாழ் செங்குந்தா சந்தை தொகுதியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு.

யாழ் செங்குந்தா சந்தை

யாழ் செங்குந்தா சந்தை தொகுதியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடந்த முதலாம் திகதி (01.10.2017) நாட்டி வைத்துள்ளார்.

யாழ் மாநகர ஆணையாளராக சீ.வீ.கே.சிவஞானம் இருந்த போது 2006ஆம் ஆண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது எனினும் நாட்டில் ஏற்பட்ட போர் சூழ் நிலைகள் காரணமாக கட்டிட பணிகள் ஆரம்பிக்கபடவில்லை.

சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாநகர ஆணையாளராக இருந்த போதும்,அதற்கு பின்பும் தற்பொழுது வடக்கு மாகாண சபை உறுப்பினராக வந்த பின்பும் தொடர்சியாக செங்குந்தா சந்தை தொகுதியின் புதிய கட்டிட பணிகளை ஆரம்பிக்குமாறு யாழ் மாநகர சபையையும்,வடக்கு மாகாண முதலமைச்சரையும் தொடர்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்.இதற்கமைய தற்பொழுது புதிய கட்டிடத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் செங்குந்தா சந்தை

யாழ் மாநகரசபை ஆணையாளராக சீ.வீ.கே.சிவஞானம் இருந்த போது ஏற்கனவே சந்தை தொகுதியின் புதிய கட்டிட தொகுதி அமைக்கவென யாழ் மாநகர சபையில் ஒதுக்கி வைத்திருந்த 4மில்லியனுக்கு சற்று அதிகமான தொகையும் மாநகர சபையின் மேலதிக நிதிப் பங்களிப்புடன் கிட்டதட்ட 10மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டிட தொகுதி அமைக்கபடவுள்ளது. இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன்,யாழ் மாநகர சபையின் உயர் அதிகாரிகள்,வர்த்தகர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

யாழ் செங்குந்தா சந்தையாழ் செங்குந்தா சந்தையாழ் செங்குந்தா சந்தையாழ் செங்குந்தா சந்தையாழ் செங்குந்தா சந்தையாழ் செங்குந்தா சந்தை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]