யாழ் கொடிகாமத்தில் கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது

யாழ் கொடிகாமத்தில் கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது

கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் யாழ் கொடிகாமத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து முப்பத்தி ஆறு கிலோ கேரள கஞ்சாவும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது

கஞ்சா வர்த்தகம் இடம்பெறுவதாக கொடிகாமம் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொடிகாமம் தென்னைத்தோட்டப்பகுதியில்வைத்து இந்த 36கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன், கொடிகாமம் பகுதியைச்சேர்ந்த 22 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் இருவரும் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]