யாழ். குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது

யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றுமாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது

இந்நிலையில் இன்றுகாலை திருவிழா திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

திருவிழா திருப்பலி யாழ் நாவாந்துறை ஆலய பங்குத்தந்தை அன்ரனிபாலா மற்றும் மன்னார் மாழ்தை பங்கு தந்தை மரியதாஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது

அத்துடன் விசேட ஆராதனை வழிபாடுகளும் திருச்சொரூப பவனியும் இதன்போது இடம்பெற்றது

இந்த தருவிழா திருப்பலியில் யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலருந்து பெரும் எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்

இதேவேளை இத்தீவிற்கு யாத்தரிகர்கள் பாதுகாப்பானமுறையில் சென்றுவருவதற்கு ஏதுவாக கடற்படையினர் விசேட பாதை ஒன்றை அமைத்ததுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]