யாழ். குடாநாட்டில் களமிறங்கும் கடற்படை கொமாண்டோக்கள்

யாழ். குடாநாட்டில் கடலோரக் காவல்படைக்கு உதவியாக கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, கடந்த 7ஆம் திகதி பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர், கடற்படை கொமாண்டோக்களின் உதவியுடன் கடலோரக் காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ் குடாநாட்டில்

மண் ஏற்றப்பட்ட நிலையில் இருந்த உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 21ஆம் திகதி, வல்லிபுரக் கோவில் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்ற கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்த சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடலோரக் காவல் படையினருக்கு உதவியாக, கடற்படை கொமாண்டோக்களை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]