யாழ், கிளிநொச்சியில் அடுத்த சந்திப்பு

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்தக்கட்ட பொதுமக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 15ஆம் திகதி கிளிநொச்சியிலும் இந்த மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 9 மணிமுதல் 10.30 மணி வரை நெடுந்தீவு, ஊர்காவல்துறை, வேலணை, காரைநகர், யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பளை உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள காணாமல்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

காலை 10.45 மணிமுதல் 12.15 மணி வரை கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள காணாமல்போனோரின் உறவுகளுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதி கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில், காலை 9.30 மணிமுதல் 11.30 மணி வரை காணாமல்போனோரின் உறவினர்களுடனும், காலை 11.45 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறள்ளதாகவும் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]