யாழ் கடற்பரப்பில் இருந்த 80 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்த நிலையில் இருந்த 80 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரால் அதிகாலை 2.30 அளவில் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காங்கேசன்துறை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த கேரள கஞ்சா தொடர்பில் சந்தேகத்துக்குரிய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]