யாழ்.இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்.இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ். இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சரின் உத்தரவைக் கண்டித்து, இன்று (01) முதல் இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

195 மில்லியன் ரூபாய் நிதியில் வவுனியாவில் கட்டப்பட்ட மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு செல்லுமாறு தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“ஒன்றிணைந்த தொழிற்சங்க பிரச்சினையினை முதலமைச்சர் தீர்த்து வைத்திருக்க முடியும். புதிய பஸ் நிலையத்திற்கு சென்று வர தயார். ஆனால், எமக்கென தனித்துவமான பாதையினைத் தர வேண்டுமென்றே வலியுறுத்துகின்றோம்” என, வடமாகாண ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

“தவறுகளை சரி செய்ய வேண்டும். தவறுகளை சரி செய்திருந்தால் நியாயப்படுத்தல் வந்திருக்க முடியாது. எமது கோரிக்கைக்கு செவிமடுத்து சாதகமான பதிலை தர வேண்டும். கதைத்து முடிவு எடுக்க வேண்டும்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிடில் தமது போராட்டம் தொடருமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]