யாழ்.அரியாலை துப்பாக்கிச் சூடு – அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினர் இருவர் கைது!

யாழ்.அரியாலை துப்பாக்கிச் சூடு – அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினர் இருவர் கைது!

யாழ்.அரியாலை துப்பாக்சி சூடு

யாழ்.அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் பகுதியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினர் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரே இன்று (03.11) இருவரையும் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் நிலாந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் புஸ்பகுமார ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிவில் உடையில் வந்த

கடந்த மாதம் 22 ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த  இருவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 24வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ்மாஅதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் 5 பேர் கொண்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் நியமிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அந்தக்குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தமது ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வந்தநிலையில், துப்பாக்கிதாரர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி என்பவை விசேட அதிரப்படை முகாமில் இருந்ததை கண்டு பிடித்தனர்.

இரண்டாம் கட்டமாக சம்பவம் இடம்பெற்ற அந்தப்பகுதியில் உள்ள மரக்காலையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. காணொளியினை ஆதாரமாக எடுத்துக்கொண்ட போது, துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட இளைஞர் அவரின் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதும் மற்றும் அவர்களின் பின்னால், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியில் விசேட அதிரப்படையின் புலனாய்வாளர்கள் பின்தொடர்வது உள்ளிட்ட காணொளியை மீட்டனர்.

அந்த காணொளியின் பிரகாரம், விசேட அதிரப்படையின் புலனாய்வு பிரிவினரிடம் விசாரணை மேற்கொண்டதுடன், வாக்குமூலத்தினையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.

வாக்குமூலத்தின் அடிப்படையாக வைத்து நேற்றும் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப்பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 7 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த  வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவர் நேற்று (03.11) கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]