யாழ்ப்பாண வீடொன்றில் இனம் தெரியாத நபர்கள் நகை கொள்ளையடிப்பு

யாழ்ப்பாண வீடொன்றில் இனம் தெரியாத நபர்கள் நகை கொள்ளையடிப்பு

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியிலுள்ள வீடொன்றில் இனம் தெரியாத நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாகவும், நாதஸ்வர வித்துவானின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், 11 பவுண் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொள்ளையர்கள் மூவரும், முகத்தினை கறுப்பு துணியால் கட்டியவாறு வீட்டிற்குள் உட்புகுந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அக்கொள்ளையர்கள், வித்துவானிடம் கத்தியை காட்டி மிரட்டி, 11பவுண் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]