யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் இடம்பெற்றது. இதில் மூன்று மாணவர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்தே
3ம் மற்றும் 4ம் வருட மாணவர்கள் பல்கலைக்கழக உட் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]