யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள திறந்த நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல்லை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று காலை நாட்டினார்.

242 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிட தொகுதி அமைக்கப்படவுள்ளது. அடிக்கல் நாட்டு நிகழ்விற்கு, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையின் தலைவர் திருமதி தாரணி கணேசானந்தன் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்த அபிமன்னசிங்கம் யாழ்யாப்பணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.இளஞ்செழியன்

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம்இ மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.

தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 3 மாடிக் கட்டடத் தொகுதி நிலக்கீழ் அடித்தளத்துடன் அமைக்கப்படவுள்ளன.
அதில் இந்த ஆண்டு 100 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]