யாழ்ப்பாண உயர் நீதிமன்றம் போலீசார் ஐவருக்கு பிணை வழங்கியுள்ளது

யாழ்ப்பாண உயர் நீதிமன்றம் போலீசார் ஐவருக்கு பிணை வழங்கியுள்ளது. அதாவது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரைச் சுட்டு கொன்ற வழக்கில் இவர்கள் ஐவரும், கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் இருந்தவர்களாவார்.

யாழ்ப்பாண உயர் நீதிமன்றம்

இவர்களுக்கு யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி M. இளஞ்செழியன் பிணை வழங்கியுள்ளார். அக்டோபர் மாதம் 20ந் திகதி 2016ம் ஆண்டு யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியிலே இவ்விரு மாணவர்களும் சுடப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தனர். அருகில் ஓர் மோட்டார் சைக்கிள் காணப்பட்டது. அவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியே மரணித்துள்ளனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததற்கான காயங்கள் இருந்தன.

இதன்பிரகாரம் யாழ் பொலிஸாரினால் சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு பொலிசார் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]