யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37வது ஆண்டு நினைவுதினம் இன்று

யாழ்ப்பாணம் பொதுநூலக எரிக்கப்பட்டு 37வது ஆண்டு நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில், பிரதம நூலகர் சுகந்தி சற்குணராஜா தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த நினைவுதின அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, யாழ்.நூலகம் எரிவதை கண்டு உயிரிழந்த அருட்தந்தை தாவீது அடிகளாரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில், யாழ்.மாநரக முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர். எம்.கே.சிவாஜிலிங்கம்,? வடமாகாண எதிர்கட்சி தலைவா சின்னத்துரை தவராசா, மற்றும் வடமாகாண சபை உறுப்பினர். பா.கஜதீபன் உட்பட யாழ்.பொதுநூலக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

1981 ஆம் ஆண்டு யூன் மாதம் 01 ஆம் திகதி அரச படைகளினால் எரியூட்டப்பட்ட போது, சுமார் 01 லட்சம் புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், இனப்படுகொலை செய்யப்பட்ட நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]