யாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரி கணணி ஆய்வுகூடத்தில் மின்னலின் தாக்கம்- வீடியோ உள்ளே!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில் இன்று மதியம் மின்னல் தாக்கியுள்ளது.

குறித்த கணணி ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்மானியில் மின்னல்தாக்கியதில் சிறியளவில் தீப்பிடித்த நிலையில் தீ அணைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சாவகச்சேரிக்குச் சென்றுள்ளதுடன், இலங்கை மின்சார சபையினரும் சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து, கல்லூரி மாணவிகள் அச்சமடைந்து காணப்பட்டதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் குறித்த சம்பவத்தைப் பார்வையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]