யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதி விசேட பொலிஸாரினால் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் அணியினரால் இன்று (09) அதிகாலை முதல் கொக்குவில் பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக்குடா நாட்டில் சட்டம் ஒழுங்கைக் குழப்புவோரைக் கைது செய்யும் நோக்கோடு கொக்குவில் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணசூரியவின் தலைமையில்இ இந்த சுற்றிவளைப்பு நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்களின் அன்றாடசெயற்பாடுகளுக்கு பாதிப்பில்லாத வகையில் இனங்காணப்பட்ட வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதோடுஇ சந்தேகமான முறையில் நடமாடுபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்களிடம் வாகன அனுமதி அட்டைகள் அவர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் தொடர்பில் சுற்றிவளைப்பின்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விசேட சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் யாராவது கைது செய்யப்பட்டமை தொடர்பிலோஇ சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பிலோ எவ்விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]