யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் 4 பொலிஸ் பிரிவுகளான யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளினால் நேற்று மாலை தொடக்கம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது, வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படுபவர்களை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் 7 பேர், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 7 பேர், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் என மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என்ற குற்றச்சாட்டில் 151 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவற்றுடன் கோப்பாய் பொலிஸ் பிரிவையும் இணைத்து 4 பொலிஸ் பிரிவுகளில் இந்தச் பொலிஸ் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]