யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்து- நால்வர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த Toyota ரக வேன் ஒன்று டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் புத்தளம் நாகவில்லு பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகணம் யாழ் ஆணைக்கோட்டையை சேர்ந்த வாகணம் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]