யாழ்ப்பாணத்திற்கு விசேட ரயில் சேவை

 

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விசேட ரயில் சேவையொன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விசேட ரயில் சேவை
இந்த ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 10.00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 6.30ற்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

இதேவேளை, பண்டிகைக் காலத்திற்காக 21 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெறும் இந்தச் சேவைகள் எதிர்வரும் 17ம் திகதி வரை இடம்பெறும். கொழும்பு கோட்டை மற்றும் மருதானையில் ஆரம்பமாகும் இந்தச் சேவைகள் வெயாங்கொட, மஹவ, அனுராதபுரம், பண்டாரவளை, களுத்துறை-தெற்கு, காலி, மாத்தறை வரையில் இடம்பெறும்.