யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடரும் மழை காரணமாக 2 ஆயிரத்து 518 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடரும் மழை காரணமாக 2 ஆயிரத்து 518 குடும்பங்கள் பாதிப்பு.

யாழ்ப்பாணக் குடாநாட்டில்

யாழ். மாவட்டத்தில் தொடரும் அடை மழை காரணமாக 2 ஆயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 141 பேர் இதுவரை பாதிப்படைந்துள்ளதோடு 4 வீடுகள் முழுமையாகவும் 159 வீடுகள் பகுதி அளவிலும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் விபரம் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடரும் மழை காரணமாக தற்போது 2 ஆயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 141 பேர் இதுவரை பாதிப்படைந்துள்ளனர். இவ்வாறு பாதிப்பினை எதிர் கொண்ட மக்களின் வாழ்விடங்களும் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. இதேநேரம் குறித்த காலநிலை மேலும் தொடருமானால் தாழ்நிலப் பகுதி மக்கள் பலர் இடம்பெயரும் சூழலும் ஏற்படும்.

இதன் பிரகாரம் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக உடுவிலில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 385 அங்கத்தவர்களும், ஊர்காவற்றுறையில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 137 அங்கத்தவர்களும், காரைநகரில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 அங்கத்தவர்களும், யாழ்ப்பாணத்தில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 209 அங்கத்தவர்களும், நல்லூரில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 552 அங்கத்தவர்களும், கோப்பாயில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 893 அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில்

அதேபோன்று சங்கானையில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 1066 அங்கத்தவர்களும், சண்டிலிப்பாயில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 444 அங்கத்தவர்களும் பாதிப்படைந்துள்ளதோடு தெல்லிப்பழையில் 393 குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த 1253 அங்கத்தவர்களும், சாவகச்சேரியில் 189 குடும்பங்களைச் சேர்ந்த 759 பேரும் பாதிப்படைந்துள்ளனர். இவ்வாறே பருத்தித்துறையில் 283 குடும்பங்களைச் சேர்ந்த 1045 அங்கத்தவர்களும், மருதங்கேணியில. கூடியபட்சமாக 643 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 382 அங்கத்தவர்களும் இதுவரையில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]