யாழ்போதனா வைத்தியசாலையின் வேண்டுகோள் – உதவவிரும்புவோர் முன்வரவேண்டும்!!

தைரொட்சைட் (கண்டக்கடலை) நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளவதற்கான உபகரணம் தேவையாக இருப்பதனால், அந்த உபகரணத்தினைப் பெற்றுக்கொடுக்க செல்வந்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் முன்வர வேண்டுமென யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர். து .சத்தியமூர்த்தி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

யுhழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (03) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இதன்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தைரொட்சைட் சத்திர சிகிச்சை தொடர்பாக காது,மூக்கு மற்றும் தொண்டை வைத்திய நிபுணர் திருமாறன் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலையில் 2 சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் இரண்டாவது தடவையாக இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தைரொட்சைட் சுரப்பிகான் சத்திரசிகிச்சை கழுத்தின் கீழ் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது, வாய்ப்பகுதியினால் தைரொட்சை அகற்றப்படுகின்றது. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 2 தைரொட்சைட் சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
ஆந்த சத்திரசிகிச்சைகளின் பின்னர் வவுனியா மற்றும் மன்னார், திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் தைரொட்சைட் நோயாளர்கள் சத்திரசிகிச்சைக்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

புhங்கொங்கில் பேராசிரியர் ஐங்குனால் முதன்முதலாக கண்டு பிடிக்கப்பட்டு, அங்கு பயிற்சி பெற்று இந்த தைரொட்சை சத்திரசிகிச்சையினை வெற்றிகரமான நிறைவு செய்துள்ளோம். கொரிய நாடுகளில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் 3 மணித்தியாலயங்களில் வீட்டிற்கு அனுப்பப்டுகின்றார்கள்.

யாழ்.போதனா வைத்தியசாலையில், அம்புலன்ஸ் வசதிகள் இன்மையால், நோயாளர்களை நீண்ட நாட்களுக்குப் பராமரிக்க வேண்டிய தேவை உள்ளது.
4 சென்றி மீற்றர் நீளமுடைய கட்டிகளையே அகற்ற முடியும். முpகப்பெரிய கட்டிகளை இந்த சத்திரசிகிச்சை மூலம் அகற்ற முடியாது.

யுhழ்.போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரையில் காது, மூக்குத் தொண்டைப் பிரிவு மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரையில் பல கோடி ரூபா பெறுமதியான உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அவற்றினை செல்வந்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தந்து உதவ முன்வர வேண்டுமென்றும், அவ்வாறு முன்வந்தால், தைரொட்சைட் சத்திரசிகிச்சையினை மிக சிறப்பாக மேற்கொள்ளமுடியுமென்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அதேபோன்று, எதிர்வரும் வாரம் இன்னொரு சத்திரசிகிச்சை யாழ்;.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]