யாழில் MJR இன் 102வது பிறந்த தின கொண்டாட்டம்!

முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமசந்திரனின் 102வது பிறந்த தினம் யாழ். பாசையூர் பகுதியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்.பாசையூர் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், இன்று  (17)  மாலை பாசையூரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவச்சிலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் மற்றும் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன், கேக் வெட்டியும் பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.

இதன்போது, கண்டியில் இருந்து வருகை தந்த ஈழத்துப் பாடகர் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்பட பாடல்களை பாடினார்.

ஆதனைத் தொடர்ந்து, யாழ்.பாசையூர் எம்.ஜி. ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் மற்றும் பாடகரினால், இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் மற்றும் யாழ்.மாநகர முதல்வர் ஆகியோருக்கு எம்.ஜி. ஆரின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

அதன்பின்னர், இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன், மற்றும் யாழ்.மாநகர முதல்வர் ஆகியோர் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட சிரேஸ்ட ஊடகவியலாளர் லாபீர் உள்ளிட்டோருக்கு எம்.ஜி.ஆரின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், பாசையூர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு வடமாகாண சபையின் நிதி பங்களிப்பில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், மன்ற உறுப்பினர்கள் என்ப பலர் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]