யாழில் இளைஞர்களுக்கு இடையில் மோதல் – நால்வர் படுகாயம்!!

மதுபோதையில் தகராற்றில் ஈடுபட்டவர்களில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பாசையூர் பகுதியில் விசேட அதிரப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.பாசையூர் அந்தோனியார் ஆலய பகுதியைச் சேர்ந்தவர்களும், ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் இன்று (01) மாலை மதுபோதையில் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர்.

தகராற்றின் போது நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யேசு உயிர்ப்பு தினமாகையால், இளைஞர்கள் பாசையூர் மீன் சந்தைக்கு அருகாமையில் மது அருந்திக்கொண்டிருந்த போது, முன்பகை காரணமாக ஈச்சமோட்டை இளைஞர்களுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர்.

தகராற்றின் போது, நால்வர் படுகாயடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சண்டை இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, சண்டை சுமூக நிலைக்கு பொலிஸாரினால் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]